பல்வேறு தேவைகளுக்காக வல்லரசு நாடுகள் இந்தியாவை நம்பியிருக்கின்றன. பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் என்ற சிஸ்டத்தில் பிற நாடுகளை வழிநடத்தும் சக்தியாக இந்தியா மாறியது எப்படி என்பதை விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
இந்தியா ஏழை நாடு, இந்திய மக்கள் வறுமையில் வாடுகின்றனர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்தியர்கள் பின்தங்கியுள்ளனர், தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிற நாடுகளையே இந்தியா சார்ந்திருக்கிறது, பொருளாதாரம் மற்றும் ராஜாங்க ரீதியாக இந்தியாவின் நிலை அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த கருப்பு வெள்ளை காலத்துக்கு END CARD போட்டாச்சு. MAKE IN INDIA, DIGITAL INDIA, நவீன இந்தியா, தற்சார்பு பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி, நிலவில் கொடி நாட்டும் அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி, பலம் வாய்ந்த ராணுவம், சக்திவாய்ந்த ஜனநாயகம், கோடிக்கணக்கில் இளைஞர் படை என COLOURFUL-ஆக கலக்கிக் கொண்டிருக்கிறது புதிய இந்தியா.
இன்றைய தேதியில் வளமாகவும் வலிமையாகவும் இருக்கும் சில நாடுகள் பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவை நம்பியுள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மைதான். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள்… துபாயில் இருக்கும் பெரிய கட்டடங்கள். லண்டனில் இருக்கும் பள்ளிகள்… ஜோஹன்னஸ்பெர்க்கில் உள்ள மருந்து நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் இந்தியர்களையோ அல்லது இந்தியாவின் பங்களிப்பையோ காண முடியும். உலகம் என்ற சிஸ்டத்தில் இந்தியா வெறும் பங்கேற்பாளர் அல்ல, பிறநாடுகளை வழிநடத்தும் சக்தி.
இந்தியப் பொறியாளர்களின் பங்கில்லாமல் தகவல் தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்காது. முக்கியமான TECH நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பதும் இந்தியர்கள்தான். மருத்துவத்துறையை எடுத்துக் கொண்டால் அதிலும் இந்தியாவே கோலோச்சுகிறது. GENERIC மருந்துகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
பாதுகாப்பு, விண்வெளி, வேளாண்மை, கல்வி என அனைத்திலும் இந்தியா வளரும் நாடு அல்ல. வளர்ந்த தேசம் என்ற இடத்தை நாம் அடைந்துவிட்டோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலக பொருளாதாரத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. அதுமட்டுமல்ல, பிற நாடுகளின் வளர்ச்சியிலும் நமக்குப் பங்கிருக்கிறது. ஒரு கோடியே 80 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தாங்கள் வசிக்கும் தேசங்களில் தேர்தல் முதல் பொருளாதாரம் வரை அனைத்தையும் வடிவமைப்பதில் இந்தியர்கள் கவனம் செலுத்துகிறார்கள். உலகின் பல்வேறு இடங்களில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் நிலையில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. தெற்குலக தேசங்கள் வளர்ச்சியடையும் போதும் விநியோகச் சங்கிலி உடையும் போதும் வல்லரசுகள் சார்பு நிலையை எடுக்கின்றன. அதன்படி இந்தியா வளர்ந்துவிட்டது என்பதை வல்லரசு நாடுகள் உணர்ந்துவிட்டன.
இந்தியச் செவிலியர்கள் இல்லாவிட்டால் பிரிட்டன் சுகாதாரத்துறை ICU-வுக்குச் செல்ல வாய்ப்புண்டு. நம் நாட்டு TECHIE-கள் இல்லையென்றால் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி சிக்கலைச் சந்திக்க நேரிடும். கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கும், மருத்துவர்களுக்கும் இந்தியாவைப் பெரிதும் நம்பியிருக்கிறது சவுதி அரேபியா. இப்படி 12 நாடுகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு இந்தியா தேவை. வர்த்தக ஒப்பந்தங்கள், கலாச்சார தொடர்புகள், மறைமுகத் தேவைகள் என உலக பொருளாதாரத்தில் நாள்தோறும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது இந்தியா.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான GOOGLE, MICROSOFT, ADOBE ஆகியவற்றின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இந்தியர்கள். தொழில்நுட்பத்துறையில் எந்தளவுக்கு நம் நாட்டை அமெரிக்கா சார்ந்திருக்கிறது என்பதற்கு சுந்தர்பிச்சை, சத்யா நாதெள்ளா, சாந்தனு நாராயணன் ஆகியோரே உதாரணம். பல்லாயிரம் கோடிகள் புரளும் கம்பெனிகளை மட்டும் இவர்கள் வழிநடத்தவில்லை, எதிர்காலத்தில் தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வடிவமைக்கிறார்கள்.
TECHNOLOGY-க்கு அடுத்தபடியாக மருந்து தயாரிப்பிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தவிதமான தவறுக்கும் இடமின்றி தயாரிக்கப்படும் இந்திய மருந்துகளுக்கு பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
பாதுகாப்புத் துறையில் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் வலுவான தொடர்பு இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெறும் பல ஆய்வுகளில் இந்திய மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
திறமையும் புதுமையான சிந்தனையும், சர்வதேச விஞ்ஞானிகள் குழுவில் இந்தியர்கள் இணையக் காரணமாக இருக்கின்றன. அமெரிக்கப் பொருளாதாரத்திலும் அங்கு வாழும் இந்தியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அந்நாட்டிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர்.
அமெரிக்காவைப் போல் ஆஸ்திரேலியாவுடனும் இந்தியாவுக்கு நெருங்கிய தொடர்புண்டு. குறிப்பாக அந்நாட்டின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு இன்றியமையாதது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இரண்டு லட்சம் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர்.
இந்திய வேளாண் பொருட்கள் அதிகளவில் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகின்றன. அதேபோல் இந்திய உழவர்கள் கையாளும் நடைமுறைகள் ஆஸ்திரேலிய விவசாயிகளால் பின்பற்றப்படுகின்றன. அந்நாட்டின் அரசியலிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ராணுவம், வர்த்தகம், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரத்துக்கு வருவோம். 35 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அந்நாட்டில் வசித்து வருகின்றனர். ரியல் எஸ்டேட், கட்டுமானம், சுகாதாரம் என பெரும்பாலான துறைகளில் ஆதிக்கம் செலுத்துவது இந்தியர்கள்தான். அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் அதிகளவு முதலீடு செய்துள்ளனர். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
நம் நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நீண்டகால உறவு உண்டு. அந்நாட்டின் பல்வேறு நிறுவனங்களில் திறமை வாய்ந்த இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான பாலமாகச் சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் இருநாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்கு இந்தியத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கிறது சவுதி அரேபியா. அந்நாட்டிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் தேசங்களில் இந்தியாவும் ஒன்று.
பிரிட்டனில் பல்வேறு தொழில்களை நடத்தி வரும் இந்தியர்கள் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கொடுத்துள்ளனர். நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்கள் இன்று நம்மிடமே கைநீட்டி சம்பளம் வாங்குகிறார்கள். மருந்து தேவைக்கு இந்தியாவைப் பெரிதும் சார்ந்திருக்கிறது பிரிட்டன். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களில் அதிகம் பேர் இந்தியர்களே.
கத்தார் நாட்டின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்திய பெருமை நம்மவர்களையேச் சேரும். 2022-ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் நடைபெற்ற போது அதற்குத் தேவையான மைதானங்களை அமைத்ததில் இந்தியத் தொழிலாளர்களுக்கு முக்கியப் பங்குண்டு. உணவுப் பொருட்களுக்கும் நம்நாட்டை நம்பியிருக்கிறது கத்தார்.
தென்னாப்ரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. மகாத்மா காந்தி அந்நாட்டில் வசித்தபோது அங்கு நிலவிய இனவெறிக்கு எதிராகப் போராடினார். அவரை தமது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர் நெல்சன் மண்டேலா. மகாத்மாவின் அகிம்சை மற்றும் சத்யாகிரகக் கொள்கைகளைப் பின்பற்றியதால்தான் தென்னாப்பிரிக்காவின் காந்தி என்ற பெயர் மண்டேலாவுக்குக் கிடைத்தது. இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு தற்போதும் வலுவாகவே இருக்கிறது. லட்சக்கணக்கான தென்னாப்பிரிக்கர்களுக்குச் சிகிச்சை அளிக்க இந்திய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
பொருளாதாரம் மற்றும் ராணுவத் தேவைகளுக்கு இந்தியாவைப் பெரிதும் நம்பியிருக்கிறது மாலத்தீவு. அந்நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவுக் கரம் நீட்ட இந்தியா தவறியதில்லை. விமான நிலையங்கள், மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிறுவனங்கள் என மாலத்தீவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியிலும் இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாகச் சீனாவைச் சமாளிக்க மாலத்தீவுக்குத் தோள்கொடுப்பதும் நம்நாடுதான்.
பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருந்த வங்கதேசம் தனிநாடாக உருவானதற்கு யார் காரணம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம், வேளாண் பொருட்கள், தொழிற்சாலைக்குத் தேவையான இயந்திரங்கள், உள்கட்டமைப்பு, வர்த்தகம் என அனைத்துக்கும் இந்தியாவைச் சார்ந்திருக்கிறது வங்கதேசம்.
நம்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் இல்லாவிட்டால் நேபாளின் உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிடும். எரிசக்தி, பெட்ரோல், மருந்து, மின்சாரம், பொருளாதாரம், பாதுகாப்பு என A TO Z இந்தியாவை நம்பியே இயங்குகிறது நேபாளம். மொழி மற்றும் பண்பாட்டு ரீதியாகவும் இருநாடுகளுக்கிடையே ஆழமான பிணைப்பு உண்டு.
2022-ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கிய போது பல வழிகளில் அந்நாட்டுக்கு இந்தியா உதவியது. பொருளாதாரத்திலும் அரசியலிலும் ஸ்திரத்தன்மை ஏற்படக் காரணமாக இருந்தது. துறைமுகம், தொழில்நுட்பம், எரிசக்தி, உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு துறைகளை மேம்படுத்தவும் இந்தியா உதவி செய்து வருகிறது.
இப்படி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய 12 நாடுகளும், வணிகம், கலாச்சாரம், எரிசக்தி, ராணுவ ஒத்துழைப்பு போன்ற துறைகளில் இந்தியாவுடன் இணைந்தோ அல்லது இந்தியாவைச் சார்ந்தோ இயங்கி வருகின்றன.
ஒரு காலத்தில் காலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியா, இன்று உலக பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கிறது. ராஜாங்க ரீதியாக இந்தியா கொடுக்கும் அழுத்தத்தை எந்த நாடாலும் புறக்கணிக்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. வல்லரசாக இந்தியா மாறப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.