மத்திய அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு கொங்கன் மற்றும் கோவா கடற்கரைகளுக்கு அப்பால் கிழக்கு மத்திய அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மத்திய அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாகவும், அது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பேரலைகள் எழும்ப வாய்ப்புள்ளதால் அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது, மேலும் 16 முதல் 18 வினாடிகளுக்கு ஒருமுறை பேரலைகள் எழும்ப உள்ளதால் வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாகவும் கடலோர குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கடல்சார் சேவை மையம் தெரிவித்துள்ளது.