வங்கதேசத்துக்கு எதிரான தொடரை யு.ஏ.இ. கைப்பற்றியது.
வங்கதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்படி 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் அபாரமாக விளையாடிய யு.ஏ.இ. அணி 19.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்தது. ஆனால், வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தொடரை யு.ஏ.இ. கைப்பற்றியது.