ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா சென்றுள்ளது.
மாஸ்கோ விமான நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், அவர்கள் சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அனைத்து எம்பிக்களும் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.