இலங்கையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சிக்கன்குனியா நோயை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
2006-ல் இலங்கையில் சிக்கன்குனியா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டது, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அதேபோன்று சுமார் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சிக்கன்குனியா பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.