ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் சிட்னிக்கு வடக்கே உள்ள பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருசில இடங்களில் 30 சென்டி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1921 மற்றும் 1929-ம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் இது என, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.