பழனி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர் பேருந்தை நிறுத்தியதில் பயணிகள் உயிர் தப்பினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து புதுக்கோட்டைச் செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பிரபு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் பயணிகளுடன் பழனியிலிருந்து பேருந்தை கணக்கன் பட்டி நோக்கி ஓட்டி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநர் பிரபுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்தை நடத்துநர் சாதுரியமாகச் செயல்பட்டு உடனடியாக நிறுத்தியதால், பயணிகள் உயிர் தப்பினர்.
பின்னர் ஓட்டுநரைச் சோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துரிதமாகச் செயல்பட்டு பயணிகளின் உயிரை நடத்துநர் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.