அபுதாபியில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மென்பொறியாளர் ஒருவர் லாட்டரியில் 230 கோடி ரூபாய் வென்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
ஓய்வுபெற்ற மென்பொறியாளரான ஸ்ரீராம் ராஜகோபாலன், தனது பிறந்தநாளையொட்டி லாட்டரி ஒன்றை வாங்கியுள்ளார். அதில் 230 கோடி ரூபாயை வென்ற ஸ்ரீராம் ராஜகோபாலன் ஒரே நாளில் கோடீஸ்வரனாக உருவெடுத்துள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் தான் வென்ற பணத்தின் மூலம் தொண்டு செய்ய எண்ணியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.