சேலத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ரயில்வே ஜங்ஷனில் மேற்கூரை சரிந்து விழுந்து 6 பேர் காயமடைந்தனர்.
சேலம் ரயில்வே ஜங்ஷனில் நுழைவாயிலின் மேற்கூரை சீரமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக தயார் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திடீரென அப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.