கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 25, 26ஆம் தேதிகளில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனடிப்படையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் இருந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 குழுக்கள் விரைந்துள்ளன. 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் சென்றுள்ளனர்.