திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர்.
முன்னதாக கோயிலுக்கு வந்த அவர்களுக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தை வலம் வந்து வணங்கிய அவர்கள், கோயில் வளாகத்திற்குள் சென்று பரிவார தெய்வங்களையும் வழிபட்டனர்.