கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை வெளுத்து வாங்கியது. மலையோரப் பகுதிகளான களியல், திற்பரப்பு, குலசேகரம், திருநந்திக்கரை, சுருளகோடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, களியல் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்தது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மலையோர கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும், பல இடங்களில் ரப்பர், வாழை, தென்னை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.