ககன்யான் வரும் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல், ஆளில்லாத ராக்கெட் நடப்பாண்டு இறுதியில் விண்ணில் ஏவி சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், 2027-ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அந்த ஆண்டில் சந்திரயான்-4 மற்றும் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டங்களைச் செயல்படுத்த நாடு தயாராகி வருவதாக அவர் கூறினார்.