கர்நாடக மாநிலம் தும்கூரில் ஹேமாவதி இணைப்பு கால்வாய் திட்டத்தால் இழந்த நிலங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.