கர்நாடக மாநிலம் ஹாவேரியில் ஜாமினில் வெளியே வந்த பாலியல் குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில், ஹனகல்லில் உள்ள தங்கும் விடுதிக்கு ஆண் நண்பருடன் வந்த பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதுதொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 பேருக்கு ஏற்கெனவே ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான அப்தான் உட்பட 7 பேர் ஜாமினில் வெளியே வந்ததையடுத்து, அவர்களுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அவர்களை போலீசார் கைது செய்தனர்.