சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை கோபாலபுரத்தில் மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதேபோல் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வழக்கறிஞர்களின் கோரிக்கையினை ஏற்று அடையாள அட்டை வழங்க பரிசீலிப்பதாக தெரிவித்தார். மேலும் வழக்கறிஞர்களுக்கான சேவைத் தொகை உயர்த்தி வழங்குவதற்கான கோரிக்கையையும் பரிசீலிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், பல தம்பிகள், பல சார்கள், இங்கே கொள்ளையடித்து கொண்டு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
பின்னர் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வழக்கறிஞர்கள் ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்னைகளை எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு கொண்டவர்கள் என தெரிவித்தார். மேலும் வழக்கறிஞர்களை பார்த்தால் பலமும், தைரியமும் வருவதாகவும் கூறினார்.