ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக மதுரையில் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பேரணி நடைபெற்றது.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மதுரையில் பாஜகவினர், தேசியக் கொடி பேரணி நடத்தினர்.
பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து 16 கால் மண்டபம் வரை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் பங்கேற்றனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பாஜகவினர் மூவர்ணக் கொடி பேரணியை நடத்தினர். பாஜக மாவட்ட துணை தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த வெற்றி பேரணி, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பாளேதோட்டம் சந்திப்பு சாலை வரை நடைபெற்றது. இதில் பாஜகவினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.