திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.