நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த பென்ச்மார்க் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது.
இதனால் சிறிது நேரம் அங்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறையினர் சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.