பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற தெளிவான தகவலை இந்திய அரசு உலகிற்குத் தெரிவித்துள்ளது எனத் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக முழு நாடும் தேசபக்தி உணர்வோடு ஒன்றுபட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்ற கூற்றுடன் சிந்து நதி நீர் விநியோகத்தை நிறுத்தியதன் மூலம், கடந்த 70 ஆண்டுகளில் எடுக்கப்படாத முடிவை பிரதமர் மோடி எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.