பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்குமெனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கயானாவில் பேசிய அவர், இந்தியா அமைதியை மட்டுமே விரும்புவதாகவும், பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தினால், அதனை மீண்டும் தொடர இந்தியா விரும்பாது எனக் கூறிய சசி தரூர், பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தார்.