1984-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களின் குடும்பத்தினருக்கு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 125 பேருக்குப் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.