அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Oct 17, 2026, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், தமிழக அரசு சார்பில் தங்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டுமென கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்மோனியா, சல்ஃபூரிக் அமிலம் போன்ற அபாயகரமான இரசாயனங்களைக் கையாளும் ரப்பர் தொழிலாளர்களுக்கு போதுமான அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து தராதது மட்டுமன்றி, தங்கள் உரிமைகளுக்காக மாதக்கணக்கில் போராடுபவர்களை இன்று வரை கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்கு ஏற்புடையதல்ல.

குறிப்பாக, அத்தொழிற்சாலையில் இயங்கிவந்த மருத்துவமனை தற்போது பகுதிநேர ஆரம்ப சுகாதார மையமாக தரமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு மருத்துவர் அதுவும் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே அங்கே பணிக்கு வருகிறார் எனவும், அரசு நிறுவனத்தில் பணிபுரியும் தங்களின் மருத்துவக் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன எனவும் குமுறும் அத்தொழிலாளர்களின் பரிதாப நிலை நம்மைக் கவலையடையச் செய்கிறது.

எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அம்மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஊழியர் மாநிலக் காப்பீட்டின் (ESIC) கீழ் அவர்களைப் பதிவு செய்வதோடு, அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKThe government should provide protective gear to rubber workers: Nayinar Nagendran urges the governmentஅரசு ரப்பர் தொழிலாளர்mk staliin
Share
Tweet
SendShare
Previous Post

சீக்கியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா!

Next Post

பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது : ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies