தமிழகத்தின் வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், வடகிழக்கு இந்தியாவில் குறைவான மழையும், வடமேற்கு இந்தியாவில் இயல்பான மழையும், மத்திய மற்றும் தென் இந்தியாவில் இயல்பிற்கு அதிகமான மழையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் இயல்பிற்கு அதிகமான மழையும், தென் மாவட்டங்களில் இயல்பான மழையும் பதிவாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை 106 சதவீதம் அதிகமாக பதிவாக கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.