வான்வெளியில் புதிய சகாப்தம் : 5ம் தலைமுறை போர் விமான தயாரிப்பை தொடங்கிய இந்தியா!
Sep 12, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வான்வெளியில் புதிய சகாப்தம் : 5ம் தலைமுறை போர் விமான தயாரிப்பை தொடங்கிய இந்தியா!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக வான்வெளி அரங்கில் புதிய சகாப்தத்தைப் படைக்கப் போகும் மேம்பட்ட நடுத்தர ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தயாரிக்கப்படும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் பாதுகாப்புப் படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்திற்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கிய மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு, அதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நூற்றுக்கும் அதிகமான ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரித்து வைத்துள்ளன. துருக்கி, தென்கொரிய ஆகிய நாடுகளும் ஐந்தாம் தலைமுறை விமானப் போட்டியில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன. இத்தகைய சூழலில் மற்ற நாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்கும் பணியில் இந்தியா களமிறங்கியுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்புத்துறையை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்திலும் தயாரிக்கப்படும் இந்த போர் விமானங்கள் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மற்ற போர் விமானங்களை ஒப்பிடும் போது குறைவான எடை கொண்டிருக்கும் இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானம் எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வகையில் தயாரிக்கப்படுகிறது. நான்காம் தலைமுறை விமானங்களை ஒப்பிடும் போது மேம்பட்ட, அதிநவீன சென்சார் தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளோடு இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.

செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இவ்வகையிலான விமானங்கள் ஒளியை விட வேகமாகப் பறக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட உள்ளன. குறைந்த எரிபொருளில் அதிகளவு தூரம் பறக்கும் திறன் உள்ளதோடு, வான்வெளி உலகில்  வீழ்த்தவே முடியாத அளவுக்கு இந்த போர் விமானங்கள் உருவாக்கப்பட உள்ளன.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ச்சியான பதட்ட நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலைக்கும், பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் ராணுவ சக்திக்கும் சவால் அளிக்கும் வகையில் இந்த ஐந்தாம் தலைமுறை விமானத்தை உருவாக்குவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த மேம்பட்ட நடுத்தர போர் விமானங்கள் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மற்றும்,பாதுகாப்புப் படைக்கு வலுசேர்ப்பதோடு, உலகளாவிய பாதுகாப்பு அரங்கில், இந்தியா வலிமையான நாடாக உருவெடுக்க உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்இந்தியாA new era in space: India begins production of 5th generation fighter aircraft5ம் தலைமுறை போர் விமானம்வான்வெளி
Share
Tweet
SendShare
Previous Post

பின்னணி காரணம் என்ன? : அமெரிக்காவில் ஐ-போன் உற்பத்தி செய்யாத ஆப்பிள்!

Next Post

வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies