டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியில் ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் சென்னை அம்பத்தூரில் தேசிய கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் நடந்த பேரணியில் பாஜக மூத்த தலைவர்
தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜ், மாநில மகளிரணி தலைவர் உமா ரதிராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமிதா, முன்னாள் ராணுவத்தினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சிகள் எதை செய்தாலும் திமுக அரசுக்கு பதற்றம் ஏற்படுவதாகக் கூறினார். டாஸ்மாக் வழக்கில் ஊழல் செய்தவர்களை விட்டுவிட்டு ஊழல் குறித்து கருத்து தெரிவித்தவர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.