தேச விடுதலைப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சாவர்க்கர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தேச விடுதலைப் போராட்டங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட சுதந்திரப் போராட்ட தியாகி, அமரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைத்து விதமான போராட்டங்களையும் முன்னெடுத்தவர், அந்தமான் சிற்றறைச் சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருந்தார். தேச விடுதலைக்கு இளைஞர்களை உத்வேகப்படுத்தும் பொருட்டு ஏராளமான தேசப் பணிகளையும் மேற்கொண்டவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய விடுதலை இயக்கம்-1857 போன்ற புத்தகங்களையும், இந்து மகா சபை போன்ற விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் உருவாக்கிய அமரர் வீர்சாவர்க்கர் பிறந்த தினத்தில், அவரது தியாகங்களைப் போற்றுவோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.