பராசக்தி தலைப்பை விட்டுக் கொடுத்தது ஏன்? என்பது குறித்து நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மார்கன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, தான் பதிவு செய்திருப்பது தெரியாமல் அவர்கள் தலைப்பை அறிவித்துவிட்டனர் எனவும், அந்த டைட்டில் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது எனவும் கூறினார்.
அதுமட்டுமின்றி தயாரிப்பாளரின் வலியும், வேதனையும் தனக்குப் புரியும் எனவும், அதனால்தான் அவர்களுக்காக அந்த தலைப்பை விட்டுக் கொடுத்து விட்டேன் எனவும் கூறியுள்ளார்.
தற்போது டாஸ்மாக் டெண்டர் முறைகேடு வழக்கில் பராசக்தி படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.