திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள வீரசூரையா, தருண விநாயகர், அரியநாச்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக வந்த காளைகள், வீரர்களுக்குச் சவால் விடும் வகையில் விளையாட்டு காட்டின. மேலும், களத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளைத் தீரத்துடன் வீரர்கள் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கட்டில், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.