சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பிரதான அடித்தளமாக பூத் கமிட்டி இருப்பதால், அதனை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களுடன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில், பூத் கமிட்டி பணிகள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக தெரிகிறது.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை ஜூன் மாதத்திற்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.