பாகிஸ்தான் விமான தளங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார்.
அசர்பைஜான் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஜெபாஸ் ஷெரீப், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாகிஸ்தான் விமான தளங்களை குறிவைத்து மே 9, 10-ம் தேதிகளில் இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்
சுமார் 15 பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறியிருக்கும் அவர், ராணுவ தளபதி அசிம் முனீரை அருகில் வைத்துக் கொண்டே இவ்வாறு பேசியுள்ளார்.
இந்தியா மீது மே 10-ம் தேதி அதிகாலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், நள்ளிரவில் திடீர் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வீசிய 15 பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை தாக்கிச் சிதைத்ததாக அவர் கூறியிருப்பது அதுதொடர்பாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக தாண்டி இலக்கை தாக்கியிருப்பதும் இதன் மூலமாக தெரியவந்துள்ளது.