ரஷ்யாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதி கருகின.
கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு அடமானோவ்கா அருகே காட்டுத்தீ பற்றியது. அதிவேகமாகப் பரவி வருவதால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
மேலும், காட்டுத்தீக்கு காரணமாக இருந்ததாகக் கூறி சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், அடமானோவ்கா உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து புரியாட்டியாவிலும் எரிந்து வரும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.