சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் அன்புமணி தலைமையில் பாமக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அன்புமணி, 23 மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 22 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை அன்புமணி, தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பாமக என்பது தனிநபர் சொத்து இல்லை எனவும், ராமதாஸ் கொள்கைகளை நிறைவேற்றக் களத்தில் இறங்கி பணியாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.