ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!
Jun 1, 2025, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

Web Desk by Web Desk
May 30, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த  5 மாதங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சொத்து மதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளது. ட்ரம்ப் மட்டுமல்ல, மொத்த குடும்பமும் ட்ரம்ப் என்ற பிராண்டை பயன்படுத்திச் சம்பாதிக்கிறது. உண்மையில் ட்ரம்பின் நிதி மதிப்பு என்ன?  அபரிதமான பணம் எங்கிருந்து ட்ரம்புக்கு வருகிறது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பணம் எனக்கு ஒரு பெரிய உந்துதலாக இருந்ததில்லை என்றும் ஸ்கோரை தக்கவைத்துக்கொள்ளப் பணத்தை ஒரு வழியாக மட்டுமே பார்ப்பதாகவும், உண்மையான உற்சாகம் விளையாட்டை விளையாடுவதுதான் என்றும்  ட்ரம்ப் கூறியிருந்தார்.

2021 ஆம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டார். 2022 ஆம் ஆண்டு, வங்கிகளிடமிருந்து சாதகமான கடன் பெறுவதற்காக சொத்துக்களின் மதிப்பை மோசடி செய்ததாக ட்ரம்ப்  மீது குற்றம் சாட்டப் பட்டது.  ( New York Attorney General Letitia James ) நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ், ட்ரம்ப் மீதும் அவரது குடும்ப வணிகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.

நீதிபதி ( Arthur F. Engoron ) ஆர்தர் எஃப். எங்கோரோன், 354 மில்லியன் டாலர்களுக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.  இது வட்டியுடன் சேர்த்து 454 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது. அவரது மகன்கள் ஒவ்வொருவரும் சுமார்  4 மில்லியன் டாலர் செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் நியூயார்க்கில் மூன்று ஆண்டுகள் ட்ரம்ப் வணிகங்களை நடத்துவதையும் தடை செய்தார்.

ட்ரம்பின் அரசியல் வாழ்க்கையின் அடித்தளம் ஆட்டம் கண்டது. இரண்டாவது முறை அதிபராகலாம் என்ற  ஆசைக்கும் அடி விழுந்தது. நிதி எதிர்காலம் கேள்விக்குறியானது.  454 மில்லியன் ரொக்கத்தைச் செலுத்த முடியாது என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப், மேல்முறையீட்டில் பத்திரத் தொகையைத் தள்ளுபடி செய்யுமாறும்,குறைந்த பட்சம் குறைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

எப்போதும் இத்தகைய கருணையை நீதிமன்றங்கள் வழங்காது. ஆனால்,ட்ரம்ப் வழக்கில்,  இழப்பீட்டை 175 மில்லியனாகக் குறைத்த நீதிமன்றம்,  ட்ரம்பின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதைத் தடுத்து உத்தரவிட்டது.

அமெரிக்க வரலாற்றில் தான் ஒரு மிகச் சிறந்த விற்பனையாளர் என்பதை மீண்டும் ட்ரம்ப் நிரூபித்தார். தீர்ப்பு வந்த மறுநாளே தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியலின் தாய் நிறுவனத்தின் பங்குகளைப் பொதுவில்  வெளியிட்டார்.

ட்ரம்ப் பிராண்ட் என்பதற்காக முதலீட்டாளர்கள் ட்ரூத் சோஷியல் பங்குகளை அசாதாரண உயரத்துக்குக் கொண்டு சென்றனர்.  கடந்த மார்ச் 7ஆம் தேதி, ட்ரம்பின் நிகர மதிப்புக்கு இது 2.6 பில்லியனைச் சேர்த்துள்ளது.

ட்ரம்பின் நிதி வெற்றி இதோடு  முடிவடையவில்லை. பணப்புழக்கத்தின் தேவையை உணர்ந்து, கிரிப்டோ சந்தையில் வணிகத்தை விரிவுபடுத்தினார். “Trump Coin” வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே TRUMP meme coin ஒன்றின் விலை 300 சதவீதம் உயர்ந்தது.  அவருக்கு போட்டியாக அவரின் மனைவியும் “melania meme coin வெளியிட்டார். வெளியான ஒரே நாளில் 2000 சதவீதம் உயர்ந்து சாதனை படைத்தது.

கடந்த அக்டோபரில் நிதி புரட்சி என்ற பெயரில், மறுவிற்பனை செய்ய முடியாத டோக்கன்களை வெளியிட்டார்.  $TRUMP  என்பது ட்ரம்புக்குச்  சொந்தமான மற்றும் ட்ரம்ப் மகன்களால் ஜூனியரால் நிர்வகிக்கப்படும் டிஜிட்டல் நாணயம். இது ஒரு முதலீடாக அல்லாமல் சூதாட்டமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

கடந்த மே 22 ஆம் தேதி, “TRUMP Coin” வைத்திருந்தவர்களுக்கு, அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரத்யேக இரவு விருந்து நடந்ததாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பிட்காயின் விலை 109,000 அமெரிக்க டாலரானது. இப்போது ட்ரம்பின்  கிரிப்டோ சொத்துக்கள் சுமார் 2.9 பில்லியன் டாலர் ஆகும். இது அவரின் மொத்த செல்வத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதமாகும்.

ஒரு அபுதாபி நிறுவனம், ட்ரம்ப்பின் கிரிப்டோ நிதியில் பல பில்லியன்களை முதலீடு செய்கிறது.  MGX, ஒரு ஸ்டேபிள்காயின் தயாரிப்புக்காக 2 பில்லியன் டாலரைக் கொடுக்க முன்வந்துள்ளது.

மேலும் 5.5 பில்லியன்டாலர்  மதிப்புள்ள ஒரு உயர்நிலை கோல்ஃப் ரிசார்ட்டைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற கத்தார் உதவியுள்ளது. இந்தத் திட்டத்தில் கடற்கரையில் டிரம்ப்-பிராண்டட் வில்லாக்கள் மற்றும் ஒரு சவுதி நிறுவனத்தால் கட்டப்படவுள்ள கோல்ஃப் மைதானம் ஆகியவை திட்டமிடப் பட்டுள்ளன.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த டிரம்பின்  நீண்டகால  வணிக கூட்டாளியான பில்லியனர் ஹுசைன் சஜ்வானி நடத்தும் நிறுவனம், அமெரிக்கா முழுவதும் உள்ள தரவு மையங்களில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

செர்பியாவில், நேட்டோவால் குண்டுவீசித் தகர்க்கப்பட்ட முன்னாள் இராணுவத் தலைமையகம் இருந்த இடம் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் நிறுவனத்துக்குக்  குத்தகைக்கு விடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு செர்பிய அரசு, இதற்கான ஒப்புதலை வழங்கி யுள்ளது.

2029-ல் நிறைவடையும் டிரம்ப் டவர் ஜெட்டா குடியிருப்பு சுமார்  1 மில்லியன் டாலர்  முதலீடு செய்பவர்களுக்குச் சவுதி அரேபியாவில் சிறந்த வசிப்பிடத்தை வழங்குகிறது. இது கடலோரத்தில்  47 மாடி ராயல் குடியிருப்பு திட்டமாகும்.

ட்ரம்ப் ஜூனியர், ( Executive Branch ) எக்ஸிகியூட்டிவ் பிராஞ்ச் என்ற பெயரில் ஒரு  புதிய CLUB பை தொடங்கியுள்ளார் இந்த கிளப்பில்  உறுப்பினர் கட்டணம் ஒரு உறுப்பினருக்கு 500,000 டாலர் ஆகும். உறுப்பினர் எண்ணிக்கை  200 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு, அக்டோபரில் 6.6 பில்லியன் டாலராக இருந்த ட்ரம்பின் சொத்து மதிப்பு, இரண்டாவது  முறையாக  அதிபரானதும் இருமடங்காக உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட், மீடியா, தொழில்நுட்பம் என ட்ரம்பின் வணிக சாம்ராஜ்யம் வேகமாக வளர்ந்து வருகிறது.  சொல்லப் போனால், ராஜாவாக இருப்பது லாபகரமானது என்பதை ட்ரம்ப் நிரூபித்து வருகிறார்.

Tags: Trumpdonald trump 2025Being a king is profitable: The Trump family is buying and accumulating assets
ShareTweetSendShare
Previous Post

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

Next Post

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Related News

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

வேதாந்த ஆச்சார்யா Vs ஐஐடி பாபா : வேத ஞானத்தை பரப்பும் இரண்டு பொறியாளர்கள்!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது : ஜெய்சங்கர்

ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு!

மக்கள் விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பெண் சக்திக்கு சவால் விட்டது பயங்கரவாதிகளுக்கு ஆபத்தாக முடிந்தது : பிரதமர் மோடி

கன்னியாகுமரி : கடலில் மிதந்து வந்த கண்டெய்னரை மீட்கும் பணி தீவிரம்!

அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல்?

மதுரை : முதலமைச்சர் வருகையால் திரையிட்டு மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்!

நைஜீரியாவில் கனமழை : வெள்ளப்பெருக்கில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசத்தில் தொடரும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies