திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோயிலுக்கு வந்த அவருக்குத் தேவஸ்தான நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். பின்னர் எல்.முருகனுக்குத் தேவஸ்தான அதிகாரிகள் லட்டு பிரசாதங்களை வழங்கினர்.
















