நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Jul 21, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டது போல் திமுக ஆட்சியில் நிலுவையில் உள்ள ஏனைய பாலியல் வழக்குகளிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது தமிழக பாஜக உட்பட பல அரசியல் கட்சிகள் முன்னெடுத்த அறப்போராட்டங்களின் விளைவாகவும், நாம் கொடுத்த அழுத்தங்களுக்கு பதிலாகவும் அண்ணா பல்கலைக் கழக கொடூரச் சம்பவத்தின் நேரடிக் குற்றவாளி ஞானசேகரன் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, இன்று 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மகளிர் நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே சமயம் இந்த வழக்கில் மறைமுகத் தொடர்புடைய அந்த “சார்” யார் என்ற கேள்வியும், ஒருவேளை திமுக-வில் உள்ள முக்கியஸ்தர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுப்பெற்றுள்ளது.

காரணம் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்த குற்றவாளி ஞானசேகரனுக்கு அரசு அமைச்சர் வரை செல்வாக்கு இருந்ததை வெளியான புகைப்படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. ஆக, ஆளும் அரசின் துணையின்றி அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் ஒரு பல்கலைக் கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் தைரியமாக எவரும் உள்நுழைய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே மேடைக்கு மேடை சமூகநீதி பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின், “யார் அந்த சார்” என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும் வரை இந்த வழக்கு விசாரணைத் தொடர உத்தரவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்தின் ஆணிவேர் யார் என்பது மக்கள் மன்றத்தில் சரியாக அடையாளம் காட்டப்பட வேண்டும். அவர் அரசியல் புள்ளியாக இருந்தாலும் சரி, அரசு அமைச்சராக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி. அதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நீதியை நம்பியிருக்கும் பிற பெண்களுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்யும் கைம்மாறு என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் சம்பந்தப்பட்ட அரக்கோணம் பாலியல் வழக்கு, 10 வயது அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு, அயனாவரம் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு, திமுக பொதுக்கூட்டத்தில் பெண் கான்ஸ்டபிளிடம் இளைஞரணி நிர்வாகிகள் அத்துமீறல், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கடலூர் திமுக கவுன்சிலர் உட்பட பல பாலியல் குற்றச் சம்பவங்களும் வழக்குகளும் நிலுவையில் உள்ளனவே, அதற்கான விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றனவா? என்று  நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரக்கோணம் வழக்கில் இன்னும் FIR கூடப் பதிவு செய்யப்படாமல் தாமதப்படுத்துவது ஏன்? இதற்கான விளக்கத்தையும் மக்கள் மன்றத்தில் முதல்வர் சமர்ப்பிக்க வேண்டும் என்று  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKtn bjpநயினார் நாகேந்திரன்annauniversity issueJustice is needed for the many pending sexual assault cases: Nayinar Nagendran insists
ShareTweetSendShare
Previous Post

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

Next Post

அரக்கோணத்தில் கூட பல சார்கள் இருக்கிறார்கள் – தமிழிசை செளந்தரராஜன்

Related News

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் : ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர்!

திமுக ஆட்சியில் பெரிய முறைகேடுகள் : செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சஸ்பெண்ட் : களைகட்டிய கள்ளச் சந்தை மதுபான விற்பனை!

முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு!

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

4வது டெஸ்ட் போட்டி – மான்செஸ்டரில் இந்திய அணி!

கர்நாடகா : ஹாசன் – சோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

மத்திய காசாவில் மக்கள் வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்!

நயாரா நிறுவனம் மீதான தடைகள் நியாயமற்றவை – ரஷ்யா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : மக்களவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல்!

குழந்தைகளின் உயிர் இளக்காரமாக போய்விட்டதா? : அண்ணாமலை கேள்வி!

ஏர் இந்தியா விமான விபத்து – மத்திய அமைச்சர் விளக்கம்!

வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த நடிகர் சோனு சூட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies