புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 2, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை அருகே செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை, அரசுப் பள்ளியாக அறிவிக்கக் கோரி கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே பெரியதம்பி உடையான்பட்டி கிராமத்தில் கடந்த 1957ஆம் ஆண்டு தேவாலய பங்குத் தந்தைக்குச் சொந்தமான இடத்தில் கிராம மக்களால் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகச் செயல்பட்டு வந்த நிலையில், பள்ளியை நிர்வகிக்க யாரும் இல்லாததால், கிராம சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.

பள்ளியில் 39 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் தலையிட்டுத்  தீர்வு காணும் வரை மாணவர்களை வகுப்புக்கு அனுப்பமாட்டோம் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Tags: Public protest by locking the Grama Seva Center building near Pudukkottaiபுதுக்கோட்டைபொதுமக்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து நிற்போம் : பிரதமர் மோடி

Next Post

உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழப்பு!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies