அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Oct 22, 2025, 05:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்று வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன என்பதை தொடர்ந்து  தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறோம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

திமுக அரசோ அவர்களின் வக்கீலை வைத்துக்கொண்டு, “சார்” பற்றியெல்லாம் பேசினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்று மிரட்டினால், விசாரணையில் உள்ள குளறுபடிகளை மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்தது.

எங்கள் சந்தேகமானது, மரியாதைக்குரிய நீதிபதி அளித்த தீர்ப்பின் மீதல்ல, தமிழக காவல் துறையாலும், அரசு வழக்கறிஞர்களாலும் நீதிபதியின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கின் ஆவணங்களை பற்றியும் விசாரணையின் முழுமைத் தன்மையை பற்றியும் தான்! இன்று எங்கள் தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக முக்கியமான பல கேள்விகளை ஆதாரத்தோடு கேட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கேட்கிறேன் – யார் அந்த சார்?

1. டிசம்பர் 24-ஆம் தேதி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஞானசேகர் ஏன் உடனடியாக விடுவிக்கப்பட்டார்?

2. டிசம்பர் 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு குற்றவாளி ஞானசேகர் தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த போலீஸ் யார்?

3. சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், திமுக வட்ட செயலாளர் திரு. கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலை. ஊழியர் திரு. நடராஜன் ஆகியோரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

4. அதன் அடிப்படையில், ஆதாரத்தை அழித்தல், குற்றவாளியை பாதுகாத்தல் உட்பட பல பிரிவுகளில் அவர்களது பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை?

5. குற்றவாளி ஞானசேகருக்கும் இவர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களும், மற்ற தொடர்புகளும் நீதிமன்றத்திலாவது சமர்ப்பிக்கப்பட்டதா இல்லையா?

6. பாதிக்கப்பட்ட பெண்ணை FIR கொடுக்க வேண்டாமென காவல்துறையினரே தடுத்தது ஏன்?

7. அதையும் மீறி துணிச்சலாக புகாரளித்த அந்தப் பெண்ணின் முழு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்?

8. மே மாதம் 16-ம் தேதி போடப்பட்ட FIR-ன் விவரங்கள் என்ன?

இன்னும் எத்தனை பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்று கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் பதிலுக்காக காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.

Tags: annauniversity issueயார் அந்த சார்Anna University sexual assault: Who is that sir? - Nainar Nagendran questionsநயினார் நாகேந்திரன் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

Next Post

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies