ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!
Oct 5, 2026, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், விடை தெரியாத பல கேள்விகள் இன்னமும் எஞ்சியிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஞானசேகரனின் Call Detail Record ஆதாரங்களை வெளியிட்டுப் பல கேள்விகளை எழுப்பியுள்ள அண்ணாமலை, திமுக அரசு யாரைக் காப்பாற்றத் துடிக்கிறது என வினவியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல விடை தெரியாத
கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன என்று  அண்ணாமலை கூறியுள்ளார்.

டிச. 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை நடந்தது என்றும் டிச. 24-ம் தேதி ஞானசேகரனைக் கைது செய்து பிறகு வெளியே விட்டுவிடுகிறார்கள் என்றும் டிச.25-ம் தேதி மாலை மீண்டும் ஞானசேகரனை போலீசார் கைது செய்கின்றனர் என அண்ணாமலை குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடில் தான் இருந்தது
என்றும் டிச. 23ம் தேதி இரவு 8.52 வரை ஏரோபிளேன் மோடில் இருந்த ஞானசேகரனின் செல்போனில் இருந்து இரவு 8.55-க்கு பிறகு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு செல்கிறது என கூறியவர், ஞானசேகரனுடன் பேசிய காவல்துறை அதிகாரி செல்போனில் இருந்து
இரவு 9.01 மணிக்கு மீண்டும் ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு செல்கிறது என  அண்ணாமலை தெரிவித்தார்.

குற்றம் செய்த பிறகு ஞானசேகரன் பேசக்கூடிய முதல் ஆளாக காவல்துறை அதிகாரி ஒருவர் இருக்கிறார் என்றும் 48 மணி நேரம் கழித்து ஞானசேகரனுடன் பேசிய காவல்துறை
அதிகாரியின் பெயரை வெளியிடுவேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஞானசேகரனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை நடைபெற்றதா? – என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

டிச.24-ம் தேதி காலை 7.17 மணிக்குத் தொடங்கி மாலை 4.01 மணி வரை 5 முறை ஞானசேகரனும் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகமும் செல்போனில் பேசினார்கள் என்று தெரிவித்தவர், திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்துடன் செல்போனில் பேசிய பிறகே ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல்நிலையம் அழைத்துச் செல்கின்றனர் என அண்ணாமலை கூறினார்.

டிச. 24-ம் தேதி கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதற்காக வெளியே விடப்பட்டார்?, ஆதாரங்களை அழிக்கவா?  என்று  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

“டிச.24-ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து
வெளியே வந்தபிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியனும் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகமும் செல்போனில் பேசுகிறார்கள் என்றும் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகமும், அண்ணா பல்கலை.யில் வேலை செய்யும் நடராஜனும் 4 நாட்களில் 13 முறை தொலைபேசியில் பேசியுள்ளனர் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

SIT பதிவு செய்த 11 வழக்குகளில் ஒன்று ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான பிரிவு என்றும்  என்ன ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறினார்.

ஞானசேகரன் மீது மே 14-ம் தேதி பதிவு செய்யப்பட்ட மற்றொரு பாலியல் வழக்கின் நிலை என்ன என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறினார். கோட்டூர் சண்முகத்திடம் செல்போனில் பேசிய காவல்துறை அதிகாரி, அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்?  என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: bjp k annamalaiannauniversity issueAnnamalai releases Gnanasekaran's CDR evidence
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies