சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பகுதியில் அதிகாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 16 பேரை போலீசார் செய்தனர். சாகசத்திற்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், சாகசத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
















