பிரதமர் மோடி 24 மணி நேரமும் கடினமாக உழைக்கும் ராஜதந்திரி என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் பாஜக பொருளாதாரப் பிரிவு சார்பில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசிய அவர், பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு மாத காலம் சேவை மாதமாகக் கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார்.
“கோயில்களை சுத்தப்படுத்துதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
“பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.
பாக்., தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நேரடியாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்டுள்ளது என்றும், தேசத்திற்கு சிறந்த தலைவராக பிரதமர் மோடி கிடைத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















