மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முகாம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற ஸ்வயம் சேவகர்கள், இசை கருவிகளை வாசித்த வண்ணம் அணிவகுத்து நின்றனர்.
முகாமில் பதசஞ்சலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அப்போது உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க மக்கள் விரும்பியதாகவும், அதனை முப்படையினர் நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார்.