சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் - எல். முருகன் விமர்சனம்!
Aug 24, 2025, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

Web Desk by Web Desk
Jun 7, 2025, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டலினின்  தொகுதி மறுவரையறை பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி உட்பட ‘இன்டி’ கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2027-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது முதலே, தமிழக முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் இல்லாத பூதத்தை உருவாக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டிற்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க, பாஜக சதி செய்வதாக  ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி வருவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

2001-ல் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மக்கள் தொகை வெகுவாக வளர்ந்துவிட்டது. ஆகவே, கண்டிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆகவே, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு.

தொகுதி மறுவரையறை எப்போது நடைபெறப் போகிறது, எந்த அடிப்படையில் நடைபெறப் போகிறது என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை, ஆனால், அதற்கு முன்பாகவே தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாய தோற்றத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறார்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பால் அவை பாதிக்கப்படக்கூடாது என்பதால், விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் நடைபெறும் என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்து விட்டது. தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார்.

விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டில் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த போதும் தெளிவுபடுத்தினார். ஆனால் மு.க.ஸ்டாலின் அவர்கள், தவறான தகவல்களை தெரிவித்து மக்களை திசை திருப்பும் அரசியலை தொடர்ந்து செய்து வருகிறார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களையும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் துணைக்கு அழைத்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி தொகுதி மறுவரையறை பற்றி பேசவில்லை.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநில முதல்வர்களின் கூட்டம் என்று அறிவித்து, பிசுபிசுத்த கூட்டம் நடத்திய திமுக, இதற்காக டெல்லியில் இன்டி’ கூட்டணி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை. டெல்லியில் ‘இன்டி’ கூட்டணி கூட்டத்தை கூட்டி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை ராகுல் காந்தியை வைத்து அறிவிக்க வேண்டியது தானே.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் இதை செய்ய முடியாது. ஏனெனில் ‘இன்டி’ கூட்டணி தலைவர்களே திமுகவின் கட்டுக்கதையை நம்புவதற்கு தயாரில்லை. இது தெரிந்து தான் அறிக்கை மேல் அறிக்கை விட்டு பல்லவி பாடிக்கொண்டு இருக்கிறார் முதலமைச்சர்.

அவரிடம் நான் கேட்கும் கேள்விகள் இது தான்,  2027-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எப்படி பிரதிநிதித்துவம் குறையும்?
தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்திய பிறகும் தொடர்ந்து பொய்யுரைப்பது ஏன்? அறிவிக்காத ஒன்றை வைத்து விஷமப் பிரசாரத்தை திமுக செய்வது ஏன்? தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுகவை,  ராகுல் காந்தி,  அகிலேஷ், யாதவ், செல்வி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ‘இன்டி’ கூட்டணி தலைவர்கள் யாரும் ஆதரிக்கவில்லையே ஏன்?

முதலமைச்சரின் தொகுதி மறுவரையறை பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி உட்பட ‘இன்டி’ கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை. தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள். தொகுதி மறுவரையறை குறித்து தமிழக முதலமைச்சர் திரு. மு. சு. ஸ்டாலினின் மடை மாற்றும் அரசியல் தோலுரிக்கப்பட்டு விட்டது.

2027ம் ஆண்டு நடத்தப்படவுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா?
தொகுதி மறுவரையறை பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பே பூச்சாண்டி கிளப்புவதை விட்டு விட்டு நான் ஏற்கனவே கூறியபடி, நிர்வாக சீர்குலைவில் இருந்து தமிழக அரசை காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கூஸ்டாலினை மீண்டும் எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: bjpL MuruganDMKMK StalinCaste-wise population census: M. K. Stalin who lost sleep - L. Murugan's criticism
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies