குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் - நீதிபதி வேதனை
Aug 5, 2025, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

Web Desk by Web Desk
Jun 7, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட சுரங்கத்துக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், புரவிபாளையத்தில் பட்டா நிலங்களில் நடத்தி வரும் குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் எடுத்ததாகக் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்து உதவி ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தாமரை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, உரிமம் இல்லாமல் கற்கள், கிராவல் மண் உள்ளிட்டவைகளை எடுக்கும் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டப்பிரிவுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் செந்தாமரைக்கு எதிராகப் புகார் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிமவளங்களுக்கு இணையான அபராதத் தொகையை வசூலிப்பதில் எந்த சமரசமும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, கோவை உதவி ஆட்சியரின் விதித்த அபராத தொகையை உறுதி செய்து மொத்த தொகையையும் செந்தாமரையிடம் இருந்து வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்  கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தைக் குடிப்பதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி, குற்றவியல்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்கோவை மாவட்டம்Quarry owners are cutting the chest of Mother Earth and drinking her blood - Judge in anguishகுவாரி மோசடி
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

Next Post

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

Related News

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கன்னியாகுமரியில் கனிமவள கட்டுமான பொருட்கள் வழங்குவதில் குளறுபடி கண்டித்து பாஜக போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies