சேலத்தில் பெய்த கனமழை காரணமாகச் சாலைகளில் கழிவுநீருடன் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சேலம் மாநகர் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டிய நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சூரமங்கலம், புதிய பேருந்து நிலையம், சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
வெள்ள நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
மேலும், சாரதா கல்லூரி சாலையில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்பைச் சரிசெய்ய வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.
















