சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் சரியும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த பெஞ்சல் புயல் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை மணல் மூட்டைகளைக் கொண்டு தற்காலிகமாகச் சரி செய்த அதிகாரிகள், மேற்கொண்டு சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மணல் மூட்டைகள் கிழிந்த நிலையில் சேதமடைந்து காட்சியளிக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.