ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!
Sep 18, 2025, 09:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயனின்று வீணாகக் கடலில் கலப்பது டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. வீணாகக் கடலில் கலக்கும் நீரை முறையாகச் சேமிக்கவும், ஆமை வேகத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காத கர்நாடக அரசு, அம்மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்க்கும் கால கட்டங்களில் உபரிநீரைத் திறந்து விடுவதையும், தமிழகத்திற்குத் தேவைப்படும் நேரங்களில் உரிய நீரை வழங்க மறுப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பாயும் காவிரியை வெள்ள வடிகாலாக மட்டுமே பயன்படுத்தி வரும் கர்நாடகத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அவ்வாறு திறக்கப்படும் நீரும் வீணாகக் கடலில் கலப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்டவோ, விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காத திமுக அரசால் விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மயிலாடுதுறையில் 516 கோடி ரூபாய் மதிப்பிலான கதவணை மற்றும் தஞ்சை புகளூரில் 406 கோடி ரூபாய் மதிப்பிலான கதவணைக்கான கட்டுமானப் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்ற அறிவிப்பு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையில் தவறாமல் இடம்பெறுகிறதே தவிர அந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துளியளவும் தொடங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயத்திற்குப் பயனின்றி வீணாகக் கடலில் கலப்பது தொடர்கதையாகி வருவதாகவும் விவசாயிகள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்

ஏற்கனவே, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பெரும் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய நீரும் கிடைக்காத காரணத்தினால் பாசன நிலங்களின் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை முறையாகச் சேமித்து விவசாயத்திற்குப் பயன்படுத்துவதோடு, புதிய தடுப்பணைகளைக் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: விவசாயிகள் வேதனைTurtle-like check dam: Pain due to Cauvery water flowing into the sea in vainஆமைவேகத்தில் தடுப்பணை
ShareTweetSendShare
Previous Post

சுமார் 6,400 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!

Related News

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies