வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீடுகளை ஒதுக்க லஞ்சம் : திமுகவினருக்கே ஒதுக்கப்படுவதாக கொந்தளிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 11, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மந்தைவெளி அருகே புதுப்பிக்கப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் ஏற்கனவே வசித்து வந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. உரிய ஆதாரங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடுகள் ஒதுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை மந்தைவெளி ஆர்.கே.நகர் வன்னியம்பதி குப்பை மேடு பகுதியில் இருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு பழுதடைந்த நிலையில் இருப்பதாகக் கூறி கடந்த 2020ம் ஆண்டு இடிக்கப்பட்டது. குடியிருப்பு இடிக்கப்படுவதற்கு முன்பாக அங்குத் தங்கியிருந்த 500க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அதே இடத்தில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் இடம் ஒதுக்கப்படும் என வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

பதினெட்டு மாதங்களில் புதிய குடியிருப்பு கட்டி முடிக்கப் படும் என அறிவித்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு அதாவது அண்மையில் தான் அந்த குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கால தாமதமாகக் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பில், ஏற்கனவே தங்கியிருந்த பொதுமக்களுக்கு மீண்டும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்டித்தருகிறோம் என வாக்குறுதியளித்த அரசு நிர்வாகம், குடியிருப்புகளைக் கட்டி முடித்த பின்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு மீண்டும் வீடுகள் ஒதுக்கப்படும் என்ற கனவில் மந்தைவெளி பகுதியிலேயே சுமார் 5 வருடங்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்த பொதுமக்கள் தற்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

புதிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படுவதற்கு மந்தை வெளிப்பகுதியின் திமுக வட்டச் செயலாளர் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை கமிசன் கேட்பதாகவும், கமிசனை கொடுக்க முடியாதவர்களுக்கு வீடுகளை ஒதுக்க முடியாது என அதிகாரப் போக்குடன் பேசுவதாகவும் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்

சிறு வயதிலிருந்து வசித்து வந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் திமுகவின் ஆதரவாளர்கள் பலருக்கு வீடுகள் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடியிருப்பிலிருந்ததற்கான சான்றிதழ் என அனைத்து ஆதாரங்களையும் வழங்கிய பின்பும் வீடுகள் ஒதுக்க மறுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பழைய குடியிருப்புகளை இடிக்கும் போது இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும் எனத் தெரிவித்துவிட்டு தற்போது 11 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே வீடுகள் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசித்து வந்த மக்கள், குடியிருப்பைப் புதுப்பிக்கிறோம் எனும் பெயரில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். தங்க வீடுகளின்றியும், யாருடைய ஆதரவின்றியும் தவித்து வரும் மக்களுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி முறையான குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Bribery to allocate houses: Uproar over allocation to DMK membersவீடுகளை ஒதுக்க லஞ்சம்சென்னை மந்தைவெளிலஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடுகள்
Share
Tweet
SendShare
Previous Post

ஆமைவேகத்தில் தடுப்பணை : வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரால் விவசாயிகள் வேதனை!

Next Post

தேசிய சட்டப் பல்கலை நுழைவு தேர்வில் வெற்றி : விடா முயற்சியால் சாதித்த மலைக்கிராம மாணவர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies