I-STAR- வானில் நெற்றிக்கண் : அதிநவீன உளவு விமானத்தை வாங்க இந்தியா முடிவு!
Oct 2, 2025, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

I-STAR- வானில் நெற்றிக்கண் : அதிநவீன உளவு விமானத்தை வாங்க இந்தியா முடிவு!

Web Desk by Web Desk
Jun 12, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, எதிரிகளின் இலக்குகளைக் கண்காணித்து துல்லியமாகத் தாக்கும் அதிநவீன I-STAR உளவு விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. கூடுதலாக, I-STAR உளவு விமானங்களை  உள்நாட்டிலேயே மேம்படுத்தவும் DRDO திட்டமிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தேசத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்துவரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளாக, பாதுகாப்புத் துறையில் நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டு உற்பத்தி என்ற பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது.

2023-24 நிதியாண்டில், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி  1.27 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 16.7 சதவீதம் அதிகமாகும். மேலும், 65 சதவீத ஆயுத தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியாகும்.

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதித் துறை முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை அடைந்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா இராணுவத்தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. 2023-24 நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி  21,083 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த பத்தாண்டுகளில் 30 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்னும் நான்கு ஆண்டுகளில், பாதுகாப்பு ஏற்றுமதி 50,000 கோடி என்ற இலக்கை அடையும் என்று கூறப்படுகிறது.

iDEX (Innovations for Defence Excellence) ஐடெக்ஸ்  மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (Technology Development Fund) (TDF) மூலம் இராணுவத்துக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சுமார் 619 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், DRDO உடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை விரிவாக்கத்துக்காக உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் மேம்பட்ட பீரங்கி துப்பாக்கி அமைப்பு என இந்தியா தனது ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது.

SCALP குரூஸ் ஏவுகணைகள் , HAMMER வெடிகுண்டுகள் மற்றும் பறக்கும் வெடிமருந்துகள் போன்ற உயர் துல்லிய ஆயுதங்களும் இந்திய விமானப்படையில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. இவை குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரில் துல்லியமான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில்,  10,000 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று அதிநவீன I-STAR உளவு விமானங்களை போயிங் மற்றும் பாம்பார்டியர் போன்ற  நிறுவனங்களிடமிருந்து வாங்க இந்திய விமானப் படை முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்புதலை இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வான்வழி மற்றும் தரைவழியிலும்  இந்த உளவு விமானங்கள், புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் இலக்குகளைக் கண்டறிதல் போன்ற பணிகளைத் துல்லியமாகச் செய்யும் திறன் கொண்டவை.  உளவு விமானங்களை வாங்கிய பின்னர்,  DRDO-வின்ஏர்போர்ன் சிஸ்டம்ஸ் மையத்தால் (CABS) உருவாக்கப்பட்ட உள்நாட்டு சென்சார் மற்றும் மின்னணு அமைப்புகளுடன் பொருத்தப்படும்.இதற்கான  சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப் பட்டுள்ளன.

DRDO வான்வழி அமைப்புகள், கடினமான நிலப்பரப்புகளில் கூட, எதிரிகளின் இலக்குகளை 24 மணி நேரமும் கண்டறிந்து கண்காணிக்க விமானத்துக்கு உதவும்.  இது, துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கு  நிகழ் நேர, உயர் நம்பகத்தன்மை கொண்ட நுண்ணறிவை வழங்கும்.

இதுவரை, ​​அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகைய அதிநவீன உளவு விமானங்களை வைத்துள்ளன. அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இணையவுள்ளது.

எதிரியின் தாக்குதல்களை வெற்றிகரமாகத் தடுப்பதோடு,விரைவான பதிலடி கொடுக்கவும், எல்லைகளுக்கு அப்பால் தேசியப் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் இந்த அதிநவீன I-STAR உளவு விமானங்கள் இனி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: IndiaIndian Air ForceI-STAR- Eye in the Sky: India decides to buy state-of-the-art spy planeI-STAR- வானில் நெற்றிக்கண்
ShareTweetSendShare
Previous Post

நெல்லை – நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கோலாகலம்!

Next Post

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – 241 பேர் பலி!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies