திமுக கூட்டணி நிலைத்தன்மை இல்லாத கூட்டணியாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்கனிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் திமுக மறைப்பதாகவும், திமுக என்றாலே ஸ்டிக்கர்; ஸ்டாம்ப் ஒட்டும் அரசு என்றும் அவர் சாடினார்.
திமுக அரசு மக்களுக்காக எந்த திட்டங்களையும் கொண்டு வருவதில்லை என்றும் அவர் கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் திமுக அரசிற்கு முடிவுரை எழுதப்படும் என்றும், திமுக கூட்டணி நிலைத்தன்மை இல்லாத கூட்டணியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்டிஏ கூட்டணி அமைத்த பிறகு இண்டி கூட்டணியில் தினந்தோறும் குழப்பம் நிலவுகிறது என்றும், திமுக ஆட்சியாளர்கள் மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். ஊழல் மிகுந்த திமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.